உளவளத்துணை ஓர் அறிமுகம் (சீர்மியம்)
எமது எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த முறை, அதை (எதிர்காலத்தை) உருவாக்கிக் கொள்வதுதான்!
‘நல்ல மனைவியை அல்லது கணவரை வறுமையிலும், சிறந்த நண்பரைக் கஷ்ட காலத்திலும், சுற்றத்தவரைத் துன்பத்திலும் தெரிந்து கொள்ளலாம்’ என்று ஒரு பழமொழி உள்ளது.
ஈயும் எறும்பும் கூட இனிப்பான, இன்பமான காலத்தில் தேடி வரும். ஆகவே துன்பத்தில் உதவுபவரைத் தேடு" என்று எழுத்தாளர் மு.வ அவர்கள் தனது நாவல் ஒன்றில் குறிப்பிடுவார்.
ஆழ்ந்த விருப்பங்கள், ஆசைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு - குறிப்பாகக் கஷ்டமான காலத்தில் அவற்றை மனம் திறந்து பகிர்ந்து கொள்வதற்கு வாழ்வில் ஓரிருவர் இருப்பது மிக அவசியம். எல்லாவற்றையும் ஒருவரோடு பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் சிலவற்றைச் சிலரோடு தெரிவு செய்து பகிரலாம்.
குடும்ப அங்கத்தவர்களில் நெருக்கமானவர்களோடு சிலர் அவற்றைப் பகிர்ந்து கொள்வதுண்டு, இன்னும் சிலர் நெருங்கிய நண்பர்களோடு கலந்து பேசிக் கொள்வார்கள். அவை மிகச் சரியான, மிக ஆரோக்கியமான விடயங்களேயாகும். சென்ற தலைமுறைவரை எமது கலாசாரத்தில் நாட்டு வைத்தியம் செய்கிற குடும்ப வைத்தியர் ஒருவர் இருந்தார். அவரைக் கிராமத்திலே 'பரியாரியார்' என்று அழைப்பார்கள். அவருக்கு ஒரு குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்கள். இன்ப துன்பங்கள் யாவும் தெரியும். அவரிடம் உடல் நோய்க்கு மருந்து எடுக்கப் போகும் சந்தர்ப்பங்களில், மனதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியும் ஆற அமரப் பேசிக் கொள்ளலாம். அவர் ஆறுதல் வார்த்தைகள் கூறி. மருந்தும் கொடுப்பார். அதுவும் ஒரு வகையில் நல்ல முறையாகவே இருந்தது.
சம காலத்தில் உலகம் முழுவதிலும் விஞ்ஞான முறையில் அமைந்த மருத்துவ முறைகள் பிரபலம் பெற்று விட்டன. “குடும்ப வைத்தியர்" என்ற வகிபாகம் எமது நாட்டில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. வைத்திய நிபுணத்துவத் துறைகள் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு உறுப்புக்கும் என்று பல்கிப் பெருகி விட்டதால், எந்த வைத்திய நிபுணருடனும் முழுமையான உடல். உள் நலம் பற்றிப் பேச முடியாமல் போய்விட்டது. அவர்களும் முற்றாகவே நேரம் இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.
இத்தகைய ஒரு நிலையிலும் உளநலம், நலமின்மை தொடர்பாகச் சீர்மிய உளவியல் அறிவும், அநுபவமும், நம்பகத் தன்மையும் கொண்ட ஒருவரோடு மனச் சுமையைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய விஞ்ஞான முறை உலகம் முழுவதும் பரவியுள்ளது. எமது நாட்டிலும் சீர்மியர்கள் பலர் இருக்கிறார்கள். மொட்டாக இருப்பதில் உள்ள வலி, பூவாக விரிவதில் உள்ள வலியை விட அதிகமாக இருக்கும்போது உளவளத்துணையாளர்( சீர்மியர்) முன்னே மனதை விரிக்கலாம்.
சீர்மியம் என்பது தொடர்பாடல் வழியாக மனதை வளப்படுத்தும் ஒரு சிகிச்சை. ஒருவரின் பிரச்சினைகளைக் கேட்பதன் வழியாகவும், சேவைநாடி( சீர்மிய) நாடிகள் தங்களைப் பற்றியும் தங்கள் மனதின் உணர்வுகளைப் பற்றியும் கதைக்க வழி சமைப்பதன் மூலமாகவும் சீர்மியர் சீர்மிய நாடிக்கு உதவி கொடுக்கிறார். ஆயினும் சீர்மியம் என்பது ஆலோசனை கொடுப்பது போலவோ அல்லது வழிமுறைகளைக் காட்டிக் கொடுப்பது போலவோ அமைவதில்லை என்பது குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
உளவளத்துணை ஆலோசனையென்பது அறிவுரை வழங்குதலோ, தீர்ப்பு வழங்குதலோ அல்ல: சேவைநாடி தானாகவே தன்னுடைய பிரச்சினையை உணர்ந்து பிரச்சினைகளை தீர்க்க உதவுவதாகும். ஆலோசனையானது மனநிலையை மேம்படுத்தவும், மனநோய்க்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும், தகவல் தொடர்பு மற்றும் உறவுகளை மேம்படுத்தவும், சுயமரியாதை மற்றும் பின்னடைவை மேம்படுத்தவும் உதவும்.
யாருக்கு ஒரு உளவளத்துணையாளர்( சீர்மியர்) உளவளத்துணை( சீர்மியம்) செய்யலாம் என்று கேட்டால், உணர்ச்சிகள், நடத்தை அல்லது உளநலத்தில் கஷ்டம் இருப்பதாகச் சொல்பவர்களுக்குச் சீர்மியம் வழங்கலாம். புறச் சூழலை எங்களால் எந்த வகையிலும் மாற்ற முடியாதபோது எம்மை நாமே மாற்றிக் கொள்ளும் சவாலுக்கு உட்படுகிறோம். அப்போது சீர்மியர் உதவலாம்.
உளவளத்துயையாளர்( சீர்மியர); ஒருவர் தனது தொழிலுக்குத் தேவையான பல நுண் திறன்களையும் பல உளவியல் சிகிச்சை முறைகளையும் பயின்றிருப்பார். அவர் தொழிற்படும்போது அவற்றில் சில கூறுகளோ அல்லது பல கூறுகளோ தேவைக்கேற்றபடி இணைந்து கொள்ளும்.
அதே நேரத்தில் திறன்களும் சிகிச்சை முறைகளும் மட்டும் ஒருவரை நல்ல உளவளத்துணையாளர்( சீர்மியர்); ஆக்கிவிடுவதில்லை. ஊளவளத்துணையாளருக்குரிய ( சீர்மியருக்குரிய) ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவராகவும், அதற்குரிய ஆளுமைக் கூறுகளுடன் மற்றர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவராகவும் அவர் அமைவது அவசியம்.
ஊளவளத்துணையாளர் (சீர்மியர்) ஒரு நாடிக்கு உதவுவதன் மூலம் உலகம் முழுவதையும் மாற்றியமைக்க முடியாமல் போகலாம். ஆயினும் அந்த ஒருவருக்கு உலகமே மாறிப் போகலாம்.
யாருக்குத் தனிநபர் உதவி தேவைப்படுகிறது. யாருக்குக் குடும்ப ரீதியான சீர்மியம் செய்ய வேண்டியிருக்கிறது. யாருக்கு எந்தச் சிகிச்சை முறையைக் கையாள்வது என்ற முடிவுகளைச் சிலவேளை உளவளத்துணையாளர் (சீரமியர); எடுக்க நேரலாம். சிலவேளை சிகிச்சைமுறை வைத்திய நிபுணரால் குறித்து அனுப்பப்படலாம்.
மனிதன் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகிய அம்சங்களைக் கொண்டு இறைவனால் படைக்கப்பட்டுள்ள மிகவும் மேலான படைப்பாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.இவ்வாறான மனிதன் கருவறையிலிருந்து கல்லறைக்குச் செல்லும் வரையில், நாளாந்தம் தனியாகவும், குடும்பமாகவும்,குழுவாகவும் இவ்வுலகில் பல்வேறு வாழும்போது பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுப்பதை தவிர்க்கமுடியாது. இவ்வாறான நிலைமைகளின் சிலர் கடந்து செல்கின்றனர்.ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகங்கொடுத்து வாழ்வதில் தோல்வி கண்டு,உள நெருக்குதல் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தீர்வுகளும் திட்டங்களும் தெரியாது அவற்றிலிருந்து, தானாகவே விடுபட முடியாது நாளாந்தம் தனது வாழ்வை கண்ணீரிலும் கவலையிலும் நிம்மதியிழந்து வாழ்கின்ற அவல நிலைக்கு உள்ளாகி வாழ் நேரிடுகின்றது. இதன்போது அம்மனிதனில் உடல் மற்றும் உள ரீதியாக பல்வேறு நேரெதிரான வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் பாரிய உளநோய்களுக்கும் ஆட்பட நேரிடுகின்றது. ஈற்றில், மீள வழி தெரியாத அம்மனிதன் உள அமைதியை இழந்தவனாக வாழ்கின்றான். யேவழையெட ஐளெவவைரவந ழக ஆநவெயட ர்நயடவா கருத்துப்படி. கிட்டத்தட்ட 5 அமெரிக்கர்களில் ஒருவர் அல்லது 1..5 மில்லியன் மக்கள் மனநோயுடன் வாழ்கின்றனர். உலகளவில், உலக மக்கள்தொகையில் குறைந்தது 10மூ மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான சூழ்நிலைகளில் மக்களை வழிப்படத்தும் ஓர் உன்னத செயற்பாடாக உளவளத்துணை மற்றும் அதனூடான செயற்பாடு காணப்படுகின்றது.
உளவியல் என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை விஞ்ஞான முறையில் ஆய்வு செய்யும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும். இன்று ஒரு பெரும் அறிவுத் துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிரசித்தம் பெற்றது. "உளவியல்" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான "சைக்" என்பதிலிருந்து வந்தது. மனோதத்துவம் சம்பந்தமான கற்கை என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆரம்பத்தில் “ஆன்மா” பற்றியதாக இருந்தது. பின்னர் தத்துவவியலாளர்களால் இது “மனம்” சார்ந்தது என்று கூறப்பட்டது. பின்னாளில் உள ஆய்வியலாளரான “சிக்மன் புறொயிட்” அவர்கள் இது விஞ்ஞானம் சார்ந்த உளஆய்வு என நிறுவினார். இந்தத் துறையின் தொழில்முறை ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர்.
தற்போது நவீன உளவியலில் பல பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1. அசாதாரண உளவியல் - உளவியல் மற்றும் அசாதாரண நடத்தை
2. நடத்தை உளவியல் - நடத்தைகள் எவ்வாறு உருவாகின்றன
3. மருத்துவ உளவியல் - மனநல கோளாறுகளின் மதிப்பீடு மற்றும் சிகிச்சை
4. அறிவாற்றல் உளவியல் - நாம் எப்படி சிந்திக்கிறோம்
5. ஆலோசனை உளவியல் - மன பிரச்சனையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை அளித்தல்
6. வளர்ச்சி உளவியல் - வாழ்நாள் முழுவதும் மனிதர்களின் வளர்ச்சியும் அதனூடான விருத்தியும்
7. பரிசோதனை உளவியல் - மூளை மற்றும் நடத்தைகள் பற்றிய ஆராய்ச்சி
8. தடயவியல் உளவியல் - சட்ட அமைப்புகளுக்குள் உளவியல்
9. உடல்நல உளவியல் - உளவியல் ஆரோக்கியத்தையும் நோயையும் எவ்வாறு பாதிக்கிறது
10. பாடசாலை உளவியல் - கல்வி அமைப்புகளில் குழந்தைகளின் உளவியல்
11. சமூக உளவியல் - சமூக அமைப்பும் அதன்காரணமான உளவியல் தாக்கங்களும்
உளவியல் மற்றும் உளவியல் பகுப்பு அகராதியின் கருத்தின் படி உளவளத்துணை என்பது இரு மனிதர்களுக்கிடையேயான ஒரு தொடர்பாகும். இங்கு ஒரு நபர் மற்றைய நபருக்கு அவருடைய பிரச்சனையைத்தீர்க்க முனைவதனை அல்லது உதவி செய்வதனை இது சுட்டிக்காட்டுகின்றது. இருந்தபோதிலும் இது ஒரு ஆற்றுப்படுத்தும் உளவியலாளருக்குரிய தொழில்நுட்ப பாடமாக கருதப்படுவதில்லை மாறாக ஆற்றுப்படுத்தல் மற்றும் அதன் தோற்றமானது உளவியல்சார்ந்த உட்கருத்துக்களையும் அதன் விளக்கங்களையும் உள்ளடக்கங்களையும் தருகின்றது. ஆற்றுப்படுத்தலானது "உழரளெடைரைஅ" ஒன்றை அறிந்து கொள்ளல், கிரகித்தல் அல்லது ஒன்றாகச் செல்லுதல்எனும் கருத்தினையும் "ளநடடயn" என்பது விற்றல், கொடுத்தல், வழங்குதல் போன்ற அர்த்தத்தினையும் தருகின்றது. "உளவளத்துணை என்பது சக்தியைப்பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஒன்றாகும்"- எனிஜோன்ஸ் கூறுகின்றார் அத்தோடு "உளவளத்துணை என்பது ஒருவருக்கு அவரைப்பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதற்கமைய அவர் எதிர் நோக்கும்
பிரச்சினைகளை அவரே தீர்த்துக்கொள்வதற்கு வழங்கப்படும் உதவியாகும்" கார்ல் ரோஜர்ஸ் கூறுகின்றார்.
அந்தவகையில் உளவளத்துணை என்பது ஒருவர் அன்றாடவாழ்வினில் ஈடுபடுகின்ற போது முகங்கொடுக்கும் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்க்காத சம்பவங்களினால் ஏற்படுகின்ற உள ரீதியிலான பிரச்சனைகளிற்கு உளவியலின் முறைகளினைப் பயன்படுத்தி அவரிடம் காணப்படுகின்ற உள்ளார்ந்த ஆற்றல்கள். திறமைகள் மற்றும் ஆளுமைப் பண்புகளினைப் பயன்படுத்தி அவற்றினை வெளிக் கொண்டுவருவதன் மூலம் அவரின் பிரச்சனைகளிற்கு அவராகவே தீர்வு காண்பதற்காக உதவுகின்ற ஒரு செயன்முறையாகக் காணப்படுகின்றது. உளவளத்துணையானது பல வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டாலும் இது பிரதானமாக மூன்று வகைகளின் கீழ் நோக்கப்படுகின்றது எனலாம்.
1. தனிநபர் உளவளத்துணை
2. குடும்ப உளவளத்துணை
3. குழு உளவளத்துணை
ஒரு மனிதனுடைய முழுமையான ஆரோக்கியம் எனப்படுவது உடல் ஆரோக்கியத்தினை மாத்திரம் குறிப்பது இல்லை மாறாக உள ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் இணைந்ததே முழு ஆரோக்கியம் எனப்படுகின்றது. உடலில் ஆரோக்கிய குறைவுகள் ஏதும் ஏற்படுகின்ற வேளைகளில் மருத்துவர்களை நாடி அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளும் மனித சமுதாயமானது உளவியல்சார் பிரச்சனைகளை பெருமளவில் கண்டு கொள்வதில்லை என்றுதான் கூறவேண்டும். இது மேலும் மனிதனது ஆரோக்கியத்தினை பாதிப்பதாக அமைந்துவிடுகின்றது எனலாம்.
உளவளத்துணை செயன்முறையின் போது சேவைநாடியின் பிரச்சனையினை நன்கு புரிந்து கொண்டு அவரின் பிரச்சனைக்குரிய உண்மை நிலையினை அவர் புரிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை அளித்து இயல்பான சக்தியினை வெளிக்கொண்டுவர உதவுபவரே உளவளத்துணையாளார் ஆவார். உளவளத்துணை செயன்முறையின் போது உளவளத்துணையாளருக்கும் சேவைநாடிக்கும் இடையிலே காணப்படும் உறவானது தொழில்வாண்மையானதாகக் காணப்பட வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாகக் காணப்படுகின்றது எனலாம்
இலங்கையின் வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று ஆயுர்வேத வைத்திய முறை மற்றது சாந்தி செய்தல் முறை இவை பரம்பரையோடும் சமயத் தோடும் தொடர்புடையதாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1. ஆயுர்வேத வைத்திய முறை
2. சாந்தி செய்தல் முறை
இவை பரம்பரையோடும் சமயத் தோடும் தொடர்புடையதாக அமைந்தது.
வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன ஒன்று ஆயுர்வேத வைத்திய முறை மற்றது சாந்தி செய்தல் முறை. இவை பரம்பரையோடும் சமயத்தோடும் தொடர்புடையதாக அமைந்தது. மேலும் இலங்கையில் 1846 இல் போரில் உள்ள கெம்பல் பூங்காவிற்கு அருகில் உளரீதியாக பாதிக்கப்பட்டோருக்கான வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது 1945 இல் ஆளுநராக செயற்கொளின் டெம்பிள் என்பவர் இதற்கான ஆலோசனையை முன்வைத்தார். 1951 பொரள்ளையில்
மருத்துவமனையின் தலைவராக வைத்தியர் பெம்பி தெரிவு செய்யப்பட்டார். அவர் பரீட்சார்த்தமாக தொழில் பயிற்சி சிகிச்சை முறையை ஆரம்பித்து வைத்ததோடு பயணிக்க ஆலோசனைகளையும் முன்வைத்தார். மருத்துவமனையில் ஏற்பட்ட இடநெருக்கடியினால் 1876 தொடக்கம் 1885 க்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பு குறுந்து வத்தையில் இன்னும் ஒரு மனநோய் மருத்துவமனை கட்டப்பட்டது. பின்னர் 1971ல் அங்கொடையில் மற்றுமொரு மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 1964 கொழும்பு பிரதான வைத்தியசாலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள மருத்துவ பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 1960 காலப்பகுதியில் ஜூன் மேயர் எனும் ஆசிரியரினால் கல்வி அமைச்சினுடாக உளவியல் கற்பிக்கப்பட்டது ஆனால் இதில் ஆசிரியர்கள் கவனிக்கப்படவில்லை. பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர் ஆசிரியர்களின் தேவை கருதி 1982 காலப்பகுதியில் உளவளத்துறை போதனை ஆரம்பிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு உளவளத்துறை சேவைக்காக பல நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டது இந்த நிறுவனங்களின் ஊடாக உளவளத்துறை இலங்கையில் பல பாகங்களுக்கும் பரவலாக சென்றடைந்தது. 1986 ஆம் ஆண்டு அப்போதிலிருந்து அரசாங்கம் அத்துறையின் பக்கம் விசேட கவனம் செலுத்தியமை வரலாற்றில் முக்கியமானதாகும். 1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இத்துறை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது மேலும் 2008 ஜனவரி மாதத்தில் இருந்து தொலைபேசி ஊடாக உளவளத்துணை சேவை வழங்கும் செயற்பாடானது இடம்பெற்றது.
உளவளத்துணை பற்றி பலர் பல கருத்துக்களையும், வரைவிலக்கணங்களையும் முன்வைத்துள்ளனர். அமெரிக்க உளவியல் சங்கம் இத்துறையை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கி செல்கின்ற பயணத்தில் தான் எதிர்கொள்ளும் தடைகளை வெற்றி கொள்ள அவருக்கு அளிக்கும் தொடர் செயற்பாட்டு உதவியே உளவளத்துணையாகும். வரைவிலக்கணமானது உள ஆற்றுபடுத்துதலை வளர்ச்சி அனுபவமாக நோக்குகின்றமை நல்ல அம்சமாகக் காணப்படுகின்றது. அதாவது சேவைநாடியின் வளர்ச்சிக்கு, விருத்திக்குத் துணை புரிதலே உள ஆற்றுப்படுத்தலாகும் என்பது இதன் கருத்தாகும
அமெரிக்க உளவளத்துணை சங்கத்தின் கருத்துப்படி உளவளத்துணையின்; பிரதானமான மூன்று இலக்குகளாக பின்வருவன காணப்படகின்றன.
1. உளவளத்துணை செயற்பாட்டில் போது பாதிக்கப்படுபவர் யார்?
2. உளவளத்துணையின் நோக்கம் என்ன?
3. அந்த நோக்கத்தினை அடைவதற்கு எடுக்கப்படும் வழிமுறைகள் என்ன?
மேற்குறிப்பிட்ட எல்லா வரைவிலக்கணங்களின் பிரகாரம் உளவளத்துணை என்பது தலையீடு செய்யும் ஒரு வெற்றிகரமான செயற்பாடாகும் என்பது புலனாகிறது. உளவளத்துணை ஒரு விஞ்ஞானமாக இருப்பதுடன் மற்றொரு வகையில் ஒரு கலையாக கணிக்க முடியுமென இந்த அம்சங்களை அடிப்படையாக வைத்து விளங்கிக் கொள்ள முடியும். இன்று உளவளத்துணையானது அதிகமான நாடுகளில் வளர்ச்சியடைந்த ஒரு துறையாக காணப்படுவதுடன், அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது. மேலைத்தேய நாடுகளில் விசேடமான உளவளத்துணை நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அந்நாடுகளில் பாடசாலைகள், மற்றும் தொழிற்சாலைகள,; பல்கலைக்கழகங்கள் மருத்துவமனைகள், எல்லா தனியார் போன்ற நிறுவனங்களிலும் உளவளத்துணையாளர் ஒருவரோ அல்லது பலரோ நியமிக்கப்பட்டு தொழில்சார் உளவளத்துணை உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. அத்தோடு; அந்நாடுகளில் இத்துறைசார் அறிவினை வழங்கக்கூடிய வேறுபட்ட கற்கை நெறிகளும் வளர்ச்சியடைந்த நுட்ப முறைகளும் போதிக்கப்பட்டு துறைசார் அறிவும் தேர்ச்சியும் நிறைந்த போதிய ஆளணியினர் காணப்படுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களிடையே உளவளத்துணை தொடர்பான சிறந்த அறிவும் அதன் முக்கியத்துவமும் உளவளத்துணை பற்றிய விளக்கமும் இருத்தலும் அந்நாடுகளில் இத்துறை சிறப்பான முன்னேற்றத்தினை அடைவதற்கு ஏதுவான காரணிகளாக காணப்படுகின்றது