Sunday, June 7, 2026

வீட்டு வன்முறையின் வடிவங்கள்

உடல்ரீதியானது

உடல்ரீதியான வன்முறைகளை பெண்கள் அதிகம் அனுபவிப்பதுண்டு அந்தவகையில் குத்துதல்இ அடித்தல் அறைதல் தள்ளி விடுதல் பொருட்களை வீசுதல் முடியை இழுத்தல் கை கால்களை முறுக்குதல், கழுத்தை நெரித்தல், ஆயுதங்களை பயன்படுத்துதல், கட்டுப்படுத்தி வைத்திருத்தல், தொந்தரவு செய்தல், பெண்ணுக்கு ஆதரவளிப்பவர்களுடன் வன்முறையாக நடந்து கொள்ளுதல் மற்றும் பலமாக இழுத்தல் உதைதல் இவை துன்புறுத்தப்படுபவருக்கு உடல் ரீதியாக உணரக்கூடிய வலியை கொடுப்பதன் ஊடாக வழங்கும் வன ;முறையின் வடிவமாகும்.

பாலியல் ரீதியானது 

கட்டாயப்படுத்தி பாலியல் செயல்பாடு மற்றும் தாம்பத்திய வன்புணர்வு போன்றன மற்றும் ஒரு வீட்டு வன்முறையின் வடிவத்துடன் தொடர்புபடுகின்றது.

உளவியல் ரீதியானது 

உளவியல் ரீதியான வடிவமானது பாதிக்கப்படுபவரை உளவியல் ரீதியான வலியை உணரச் செய்வதோடு, அதனால் மனவடுவையும் ஏற்படுத்தும் இவற்றை பிறருக்கு வெளிப்படையாக பார்க்க முடியாது. இவ்வுளவியல் ரீதியான வன ;முறை துணைவரின் அடிப்படைத் தேவைகளை இல்லாமல் செய்தல் வீட்டை விட்டு வெளியே செல்லும் உரிமையினை மறுத்தல் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவரை கைவிடுதல் போன்றவற்றையும் உள்ளடக்கும்.

மனவெழுச்சி ரீதியானது 

இது பாதிக்கப்படுபவரை மதிப்பிழக்க செய்தல் கோபமூட்டுதல் மக்கள் மத்தியில் வைத்து பயனற்றவர் என உணர செய்தல். இவ் வன்முறை வடிவமானது பாதிப்புக்கு உள்ளானவரை மனவெழுச்சி ரீதியாக பாதிக்கும்.

உணர்ச்சி ரீதியானது 

அவது}றான வார்த்தை பிரயோகம் மனைவியினை குடும்ப அங்கத்தவர்கள் அயலவர்கள் முன்னாடி அவமரியாதைப்படுத்துதல் குடும்பத்தில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் மனைவியை குற்றம் சாட்டுதல் மனைவி தவறு செய்யாவிட்டாலும் அவளை குற்றவாளியாக உணர வைத்தல் விவாகரத்துக் கொடுப்பதாக பயமுறுத்துதல் வேலைக்காரி போல நடத்துதல் குடும்ப விடயத்தில் மனைவியின் அபிப்பிராயத்தை கேட்காமல் விடுதல் உறவினர்களை பார்க்க விடாது தடுத்தல் மனைவியின் குடும்பப் பின்னணியினை சுட்டிக்காட்டுதல் கொலை செய்வதாக அச்சுறுத்துதல் முதலானவை உணர்ச்சி ரீதியான துபூ;பிரயோகமாகும்.

பொருளாதார ரீதியானது 

மனைவியை வேலைக்கு அனுப்பாமல் தடுத்தல் மனைவியின் பெற்றோர் வீட்டிலிருந்து பணத்தினை கொண்டு வரும்படி கட்டாயப்படுத்துதல் முதலானவை இவற்றுள் அடங்கும்.

வாய்மொழி ரீதியானது 

பாதிக்கப்படுபவருக்கு ஏதாவது வசனம் உணர்வு ரீதியான பாதிப்பை விளைவிக்குமாயின் அது சொல் சார்ந்த துபூ;பிரயோகம் என சுட்டிக்காட்டினர். இவ்வகையான பாதிப்பு வாழ்க்கை காலத்தில் மகிழ்ச்சியையும் படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தி விடும் சொல் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த தாக்குதலை பொறுத்துக் கொண்டிருக்கின்ற பல மனைவிமாரை கடுமையான சொற்கள் கையால் அடிப்பதை விட அதிகமாக காயப்படுத்துகின்றன. இத் துபூ;பிரயோகமும் உணர்வு சார்ந்த மனவடுவை உருவாக்குகின்றது. இது ஒரு நபரை நிரந்தரமாக உருக்குலையவும் வைக்கும். 

இவ்வாறு குடும்ப வன்முறையானது எமது பெண்களுக்கு இடம்பெறுகின்றது. இது ஒரு வன்முறை சுழற்சி. இதனால் பல்வேறு சவால்களை பெண்களும் சிறுவர்களும் அனுபவிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் பெண் பாதிக்கப்படுபவர் ஆயின் குடும்பம் சமூகம் நாடு பொருளாதாரம என பலதரப்பட்ட விடயங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நூபெண்கள் எதிர் கொள்ளும் வீட்டு வன்முறை: மீளாய்வும் விளக்கமும் : கலாநிதி .ஏ.எல்.எம் றியால்தூ


வீட்டு வன்முறையின் முக்கியமான கோட்பாடுகள் 

வீட்டு வன்முறையினை புரிந்து கொள்வதற்காக பல்வேறு சமூக அறிவியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வன்முறையின் காரணங்கள் வடிவங்கள் தாக்கங்கள் மற்றும் தீர்வுகளை விளக்க உதவுகின்றன.

அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு கோட்பாடு 

இந்தக் கோட்பாட்டின்படி ஒருவரது மேலாதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிறுவுவதற்கான அதிகாரம் ஒரு சாதனமாக இருக்கின ;றது. பெரும்பாலும் இது கணவன் மனைவிக்கு எதிராக தன்னைத்தானே வலிமை வாய்ந்தவனாக காட்ட முயற்சிப்பதை குறிக்கின்றது. 

பெண்ணிய கோட்பாடு 

இக்கோட்பாடானது வீட்டு வன்முறையினை பாலின அநீதி மற்றும் சமூக ஒடுக்கு முறையின் விளைவாக காண்கிறது. பெண்கள் பாரம்பரியமாக ஆண்களால் கட்டுப்படுத்தப்படுவதால் இவர்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்படுகின்றது என்று விவாதிக்கிறது. இது பாலின சமத்துவம் மற்றும் சமூக மாற்றம் தேவை என்று வலியுறுத்துகின்றது. 

உளவியல் கோட்பாடு 

இக் கோட்பாடு வன்முறை செய்யும் நபரின் உளவியல் நிலை மன அழுத்தம் கோபத்தின் கட்டுப்பாட்டின்மை குழந்தை பருவ அனுபவங்கள் ஆகியவற்றை காரணங்களாக கூறுகின்றது. சில சமயம் பீதியோ மனநோயோ காரணமாக கூட வன்முறை நடக்கலாம். 

சமூக கற்றல் கோட்பாடு 

இக்கோட்பாட்டின்படி தன்னுடைய குழந்தை பருவத்தில் பார்த்த அனுபவித்த வன்முறையை கற்றுக்கொண்டு அதையே பின்பற்ற வாய்ப்பு உள்ளது. 

காரண கோட்பாடு 

வீட்டு வன்முறை என்பது தனி நபர் உறவுகள் சமூக அமைப்பு மற்றும் கலாச்சார சு௧௦ழ்நிலைகள் ஆகியவற்றின் செயற்கை விளைவாக உருவாகும்.