Sunday, June 7, 2026

குடும்ப வன்முறை சட்டம்


2005 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க குடும்ப வன்முறை செயல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது குடும்ப வன்முறைக்கு எதிராக இச்சட்டம் பயன்படுகின்றது. இது குடும்ப வன்முறையின் எந்த ஒரு செயற்பாட்டினையும் தடுப்பதற்கான ஏற்பாடுகளை வழங்கும். இச்சட்டம் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. இச்சட்டத்தில் குடும்ப வன்முறை செயல் நிகழ்த்தப்பட்டு வருகையில் அல்லது நிகழ்த்தப்படுகையில் அல்லது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் வேளையில் இச ;சட்டத்தினை நாடலாம். 


தேசிய அளவில் பெண்கள் உரிமைகளை பாதுகாத்தல் 

சீடோ மா நாட்டிற்கு உள்நாட்டில் வழங்கப்பட்ட பிரதிபலிப்பு சீடா உடன்படிகளுக்கு இணங்க இலங்கை செயல்பட சம்மதித்ததன் மூலம் இலங்கையில் பெண்களின் மனித உரிமைகளை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

௧௯௯௩இல் இலங்கையின் மகளிர் சாசனத்தின் வரைவு 

மகளிர் விவகாரத்துக்கென தனி அமைச்சினை அமைத்தல்  

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை தண்டனைக்குரிய குற்றமாக தண்டனை சட்டக் கோவையில் உள்ளடக்கப்படுதல் 

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டமை

ஒவ்வொரு பொலிபூ; நிலையத்திலும் மகளிர்க்குரிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு நிறுவுதல்

இலங்கை மகளிர் சாசனம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இலங்கையில் ஒரு ஜதார்த்தம் என்பதை உணர்ந்து சீடோ சமவாயத்தில் உள்ளடக்கிய பல சர்வதேச தரங்களை உள்ளடக்கிய இலங்கை பெண்கள் சாசனத்தை அரசாங்கம் மார்ச் ௦௩ ௧௯௯௩ இல் ஏற்றுக்கொண்டது இது ஏழு பரந்த பகுதிகளில் பின்பற்ற வேண்டிய தரநிலைகளை வகுக்குறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான யாழ்ப்பாணத்தில் உள்ள சேவை வழங்குனர். 

சுகாதாரத் துறை சார்ந்தோர் 

• மித்ரு பியசவின் பிரதிநிதிகள் நூநட்பு நிலையம்தூ 

• சட்ட வைத்திய அதிகாரி 

• மருத்துவ சுகாதார அதிகாரி 

• உளவளத் துணையாளர்கள் 


சமூக மற்றும் பொருளாதாரம் 

• பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர் 

• பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்  

• பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் 

• உளவளத் துணையாளர்கள் 

• சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 

• அரச சார்பற்ற நிறுவனங்கள் 


நீதித்துறை 

• பொலிபூ; நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் 

• நீதிமன்றங்கள்


ஆய்வுப் பின்னணி

குடும்ப வன்முறை வடிவங்கள் பலவிதத்தில் காணப்படுகின்றன 

உடல்ரீதியானது : அடித்தல் தீக்காயத்தை ஏற்படுத்தல் வெட்டுதல் பாலியல் வன்முறை 

உளரீதியானது : இழிவாக பேசுதல் மிரட்டுதல் பயம்முறுத்துதல் தனிமைப்படுத்துதல் பணத்தைக்  கட்டுப்படுத்துதல் 

இதனால் ஆண்களை விட பெண்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் குடும்ப வன்முறையின் வடிவங்கள் இடத்திற்கிடம் பிரதேசத்திற்கு பிரதேசம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன கடந்த ஆண்டின் காலாண்டிற்கான சண்டிலிப்பாய் பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களின் அறிக்கையின் தரவுகளின் படி குடும்ப வன்முறை வழக்குகள் அதிகம் தாக்கல்செய்யப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக இருந்தது