குடும்ப வன்முறை என்பது ஒரு நபர் தனது குடும்ப உறுப்பினரை அல்லது வாழ்க்கைத் துணையை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ கட்டுப்படுத்தவும் துன்புறுத்தவும் செய்யும் ஒரு செயலாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையானது தேசிய அல்லது பிரதேச ரீதியானது மட்டுமல்ல. அது ஓர் உலகளாவிய பிரச்சனையாகும். பெண்களுக்கு எதிரான வன ;முறையானது உலகில் எப்பாகத்திற்கும் உரித்தான ஒன்றாகும.; இது தேசிய எல்லைகளைக் கடந்தும் விரிவடைந்து செல்கின்ற ஒன்றாகும். இது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை உலகளவில் ஓர் தீவிர பிரச்சினையாக உள்ளத்துடன் அவை அனைத்து மக்களுக்கும் உரித்தான மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் மற்றும் சிறுமியரின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு ௫ பெண்களில் ஒருவர் அவர்களது நெருங்கிய துணையால் உடல் மற்றும் பாலியல் வன ;முறைக்கு உள்ளாகின்றனர். கொவிட் தொற்று நோயுடன் நாட்டில் ஏற்பட்ட சமூக பொருளாதார நிலைமைகள ; காரணமாக இந்த பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தீவிரப்படுத்தும் போக்கிற்கு வழிவகுக்கும் பல சம்பவங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். சமூகத்தினால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வௌ;வேறான பாத்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. துரதிபூ;ட்ட வசமாக ஆணாதிக்கம் வலுவாக இருக்கும் இத்தகைய சமூகங்களில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வுகள் பெண்களுக்கு எதிரான சித்திரவதையாகவும் வன்முறையாகவும் வளர்ச்சியடைவதை காணலாம். குடும்ப வன்முறை கொலை மற்றும் பாலியல் துபூ;பிரயோகம் உள்ளிட்ட பாலின அடிப்படையிலான வன்முறை உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிக முக்கிய பிரச்சனையாகும். மேலும் இவ்வாறான வன்முறையானது பெண்களின் வாழ்க்கையினை சிதைத்து பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனநலனில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின ;றது. அவர்களின் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்தை செயலிழக்க செய்வதன் மூலம் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு ஓர் மறைமுகமான தடையினை உருவாக்குகின்றது.
சமூகத்தில் ௫௦ வீதமானவர்கள் பெண்கள் ஆவர் அவள் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் மகளாகவும் நண்பியாகவும் இருக்கின்றாள். ஆண் பெண் பால்நிலை வேறுபாடுகளால் இவ்வாறான அநீதிகளை கருத்தில் கொள்ளப்படாமல் அவை இயல்பான நிலைமையென எண்ணிக்கொண்டு செயற்படுவார் ஆண்களும் இவ்வாறான பால்நிலை வேற்றுமைகளால் தங்களிற்கும் பல நன்மைகள் உள்ளது என எண்ணிக்கொண்டு இருப்பதால் அவற்றை மாற்றியமைப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள். வீட்டுவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக இவ் ஆய்வானது வன்முறையினை தோற்றுவிக்கின்ற பலவகையான காரணிகளையும் அதன் வடிவங்களையும் விபரிக்கின்றது. இதிலிருந்து வெளியே வருவதென்பது பாரிய சவாலாகவே உள்ளது. குடும்ப வன்முறை ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது அது ஓர் சமுதாய பிரச்சினையாகும். தண்டணை சட்டத்தின்படி அது ஓர் குற்றமாகும். குடும்ப வன்முறைக்கு ஆளானவர் அரசாங்க மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் மூலமாக உதவிகளை பெறமுடிவதோடு மட்டுமல்லாமல் அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடிகின்றது. ஆனாலும் பெண்கள் இது தொடர்பாக கதைப்பதற்கு முன்வருவதில்லை. உலக சுகாதார நிறுவனம் உலகெங்கிலும் உள்ள ௩ல் ௧ பெண்கள் தங்களின் நெருங்கிய துணையிடம் இருந்து அல்லது அவரது வாழ்நாளில் மற்றொரு நபரிடமிருந்து பௌதீக அல்லது பாலியல் வன ;முறையினை அனுபவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாண தமிழரின் அடிப்படை வாழ்வு குடும்பத்தை பின்னணியாக கொண்டதாகும் இதில் ஆணும் பெண்ணும் பாரம்பரியமான சடங்கின் ஊடாகவே இல்லற வாழ்விற்கு இணைந்துகொள்வதை காணமுடியும். யாழ் தமிழர் சமுதாயத்தில் ஆண்கள் ஆதிக்கமுடையவர்களாகவும் பெண்கள் அவர்களுக்கு கடமையாற்றுபவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்து பெண்கள் பல் துறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும் நாளுக்கு நாள் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துச் செல்கின்றன. அதில் மிக முக்கிய பிரச்சனையாக குடும்ப வன்முறை காணப்படுகின்றது. அத்துடன் எமது மாவட்டம் கலாச்சாரம் சாதி வர்க்கம் அந்தபூ;த்து மதம் பிரதேசம் என பல்வேறு கட்டமைப்புக்களின் கீழ் இயங்குவதால் இவ் ஆய்வானது மிகவும் இன்றியமையாதது .
ஆய்வின் நோக்கம்
சமகாலத்தில் குடும்ப வன்முறையின் வடிவங்களை அறிந்துகொள்வதுடன் அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பின் தன்மையை அறிந்துகொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை மையப்படுத்திய ஆய்வுகளை மேற்கொள்ளவும் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது
ஆய்வு முறையியல்
ஆய்வு முறையியல் என்று பார்க்கும் போது இது ஒரு பண்பு ரீதியான ஆய்வு முறையாகவே காணப்படுகின்றது. இவ் ஆய்விற்கான தரவுகளை நேர்காணல் மூலம் பெற்றுக்கொள்வது சாத்தியமானதாகின்றது. இவ் ஆய்வின் குடித்தொகை என்ற அடிப்படையில் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட குறித்த பிரதேசத்தை சார்ந்த பெண்கள் மற்றும் குறித்த சண்டிலிப்பாய் பிரதேச செயலக பெண்கள் சிறுவர் உத்தியோகத்தர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும் இவ் ஆய்வின் தரவுகள் உள்ளடக்க பகுப்பாய்வு முறைமூலம் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன
இலக்கிய மீளாய்வு
பாலினம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உயிரியல் வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டது. இந்த இரண்டு தரப்பினருக்கும் முறைப்படி நீண்டகாலமாக சமூகத்தால் உருவாக்கப்பட்ட வௌ;வேறு குணாதிசியங்கள் நடத்தைகள் அடையாளங்கள் பாத்திரங்கள் மற்றும் தொழில்கள் கூட சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சமூக காலாச்சார நிலையே பாலினமாகும்.
கல்வியில்லாமை, சமூக-பொருளாதார பின்னணி, சிறிய வயதில் திருமணம் ஆகியவை காரணமாக் பெண்கள் பல்வேறு வடிவ வன்முறைகளை நூஉடலியல், மனநிலை, பொருளாதார, பாலியல்தூ அனுபவிக்கிறார்கள். ௮௧மூ பொருளாதார கொடுமை, ௫௮மூ தனிப்பட்டத் பயணம்ஃசமூக தொடர்புஃவெளிபட வாய்ப்பு தடை, ௫௧மூ சமூக ஊடகங்கள் பிரவுசிங்ஃஒன்லைன் அனுமதிக்காமை போன்ற கட்டுப்பாடுகள். விவகாரங்கள் இருந்தும் அதன் ~௮௫மூ பெண்கள் சட்ட நடவடிக்கையெடுக்கவில்லை — காரணம்: சட்ட பரிமாணம் குறித்து தெரியாமை, குடும்ப பெயரை காக்க விருப்பம், எதிர்பாராத ஆதரவின்மை.