களப்பணியின் நோக்கம்
18மாத கால டிப்ளோமா உளவளத்துணை கற்கை நெறியின் இறுதி சமர்ப்பிப்பாக மாணவர்கள்; 150மணித்தியால களப்பயிற்சியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு சேவைநாடியோடு பணியாற்றத் தேவையான திறனை அனுபவத்தினூடாக பெற்றுக் கொள்ள இத்துறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கற்றுக் கொண்ட கற்கை விடயங்களை புதுப்பித்துக் கொள்ளவும். பிரயோகிக்கும் முறையை கற்றுக் கொள்ளவும், இக் களப்பயிற்சியானது ஒரு தளமாக அமைந்துள்ளது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற உளவளத்துணை தொடர்பான பாடநெறியில் களப்பயிற்சியானது பூரணமான உளவளத்துணையாளரை உருவாக்குகின்ற ஓர் பகுதியாக காணப்படுகின்றது. இவ் களப்பயிற்சியானது நாம் வகுப்பறையில் கற்ற பாடத்தின் ஊடாக கற்றுக்கொண்ட விடயங்களை களத்தில் பிரயோகிப்பது தொடர்பான ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. வேறுபட்ட பிரச்சினைகள் உடைய சேவை நாடிகளினை எவ்வாறு எதிர்கொள்வது அவர்களுடைய பிரச்சனைகளை எவ்வாறு இனம் கண்பது அதற்குரிய கோட்பாடுகளை எவ்வாறு பயன்படுத்தி இடையீட்டுத் திட்டங்களை உருவாக்குவது மற்றும் உளவளத் துணைத் திறன்களினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. அத்தோடு களப்பயிற்சியானது சிரேஷ்ட மற்றும் பீட மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெறுவதன் காரணத்தினால் அவர்களிடமிருந்து அனுபவங்களினை பெற்றுக்கொண்டு சிறப்பான தொழில்வாண்மையான உளவளத்துணையாளராக எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்பினை எமக்கு ஏற்படுத்தி தருகின்றது. இன்றைய காலகட்டத்தில் உளவளத்துணை செய்முறையை மேற்கொள்ளும் போது அனுபவம் என்பது கட்டாயமான ஒன்றாக காணப்படுகின்றது. அந்த அனுபவத்தை வளர்த்துக் கொள்ள உளவளத்துணை களப்பயிற்சியானது உதவுகின்றது. தனியார் உளவளத்துணை குடும்ப உளவளத்துணை குழுஉளவளத்துணை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்ற நுட்பங்கள் பாட அலகினூடாக கற்று இருந்தாலும் களப் பயிற்சியில் கிடைக்கும் அனுபவங்கள் அவற்றை மேம்படுத்துவதாக அமைகின்றது. மேலும் பல நோக்கங்களை இவ்வுளவளத்துணை பாடநெறியின் ஊடாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது.
• ஒரு நிறுவன கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான அனுபவத்திணைப்பெற்றுக் கொள்ளுதல்
• தொழில் வாண்மையான உளவளத் துணை தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ளல்,
• எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் உளவளத்துணையில் ஏற்படும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க சுய ஆற்றலினை வளர்த்துக்கொள்ளுதல்
• உளவளத்துணை திறன்களினை வளர்த்துக் கொள்ளல்வகுப்பறையில் கற்ற விடயங்களை மீட்டிப் பார்த்தல்
• உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான சிகிச்சை இடையீடுகளினை வாயிலாகதெளிவாக கற்றுக் கொள்ளல் அனுபவம்
• பிரச்சனை தீர்த்தல் தொடர்பான திறனினை கற்றுக் கொள்ளல்.
மேலும் உளவளத்துணை நடவடிக்கையின் போது அறிக்கை தயாரிப்பு, ஆவணப்படுத்தல், இரகசியம் காப்பாற்றுதல் ஆகிய முக்கியமான விடயங்களை கருத்திற்கொள்வதனால் இந்த இரு விடயங்கள் தொடர்பில் போதிய திறனையும் இக் களப்பயிற்சியின் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கற்கைநெறியின் பின்னான 150மணித்தியால களப்பயிற்சியானது வகுப்பறையில் மட்டுப்படுத்தப்பட்ட கற்கை விடயங்களை கள மேற்பார்வையாளர் மற்றும் பீடமேற்பார்வையாளர் தலைமையில் சிறப்பான முறையில் கொண்டு செல்ல அடிப்படையான தளமாக அமைந்தது